கலந்த சாதம் என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது லெமன் சாதம் அல்லது எலுமிச்சம்பழம் சாதம். மசக்கை நேரத்தில் வாய்க்கு இதமாகவும் வயிற்றிக்கு இதமாகவும் இருக்கும் ஒரு உணவு. இதற்கு தேவையான பொருட்கள்...
- அரிசி - ஒரு கப்
- எலுமிச்சம்பழம் - ஒன்று
- நல்லெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடுகு - ஒரு டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - அறை டீஸ்பூன்
- கடலை பருப்பு - அறை டீஸ்பூன்
- வேர்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
- முந்திரி பருப்பு - ஐந்து
- கரிவேபில்லை - சிறிது
- மஞ்சள் பொடி - அறை டி ஸ்பூன்
- பெருங்காய பொடி - சிறிது
- பச்சை மிளகாய் - இரண்டு
- வெந்தயம் - கால் டீஸ்பூன்
- இஞ்சி - சிறிது
- உப்பு - தேவைக்கு
- கொத்தமல்லி - சிறிது
முதலில் அரிசியை அலம்பி குக்கரில் வைத்து வடிதுக்கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு அல்லது இரண்டேகால் கப் நீர் சேர்த்தால் போதும். கோழையா விடக்கூடாது. குக்கர் திறந்தவுடன் வெளியே எடுத்து ஒரு தட்டில் அல்லது ஒரு பெரிய அகலமான பத்திரத்தில் போட்டு ஆரவிடவேண்டும்.
ஒரு கடையில், என்னை விட்டு சூடானவுடன், கடுகு போட்டு வெடிக்க விடவேண்டும், வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, வெந்தயம், கடலை பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, வேர்கடலை, முந்திரி பருப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடிகருவேபில்லை ஆகியவற்றை போட்டு சிவக்க வருக்க வேண்டும். கரிய விடக்கூடாது. அடுப்பை அனைத்துவிட்டுஇந்த கலவையை ஆரிய சாடத்தில் கொட்டி, உப்பு போட்டு நன்றாக கிளரவேண்டும். சாதத்துடன் இவை அனைத்தும் நன்றாக கலக்க வேண்டும். கிளறும்போது சாதம் மசிந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிளரியவுடன், எலுமிச்சம்பழ ஜூஸ் எடுத்து அதன் மேல் விட்டு நன்றாக கிளறி, கொத்தமல்லி தழை போட்டு பரிமாற்ற வேண்டும்.
வருத்த கலவையுடன் சாதம் கலக்கும் பொது அடுப்பை அனைதுவிடுவது நல்லது. அடுப்பில் வைத்தே கலக்கும்போது சாதம் கொழயவும், எலுமிச்சம்பழம் ஜூஸ் கசக்கவும் வாய்ப்பு இருக்கிறது.