Google

Tuesday, April 1, 2008

Garlic Rice

கொழுப்பு - வயிற்று கடுப்பு இருக்கும் நேரத்தில் சாப்பிடும் ஒரு சாதம். கொழுப்பு பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வருவது நல்லது.

இதற்க்கு தேவையான பொருட்கள்
:-

  1. வடித்த சாதம் - ஒரு கப்
  2. பூண்டு - ஐந்து
  3. உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
  4. துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
  5. சிவப்பு மிளகாய் - இரண்டு
  6. நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  7. கல் உப்பு - தேவைகேற்ப
  8. துருவிய தேங்காய் - அரைடீஸ்பூன்.

ஒரு கடாயில், பருப்புகள், மிளகாய், கல் உப்பு தேங்காய் ஆகியவற்றை சிவக்க வருக்க வேண்டும். என்னைவிடாமல் வருக்க வேண்டும். பின்னர் பூண்டை அதே கடாயில் போட்டு இரண்டு நிமிடம் வறுக்கவும். இவை அனைத்தும் ஆறியவுடன் நன்றாக ப்லேண்டேரில் பொடியாக அரைக்கவும். ஒரு சிலர் விழுது போல் அரைப்பர்அப்படியும் அரைக்கலாம். பின்னர் வடித்த சாதத்தில் இந்த பொடியை போட்டு, நல்லெண்ணெய் விட்டு நன்றாக கலந்து பரிமாறலாம்.

Sunday, March 16, 2008

Ginger Rice

இஞ்சி சாதம் - இஞ்சி தொண்டைக்கு மிகவும் இதமான ஒரு மருந்து. ஒரு புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வகை சாதம். இதற்கு தேவையான பொருட்கள்.

  1. உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
  2. thuruviya inji - nangu டேபிள் ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் - இரண்டு (தேவையான அளவு)
  4. வெங்காயம் - அரை (நன்றாக நறுக்கியது)
  5. மஞ்சள்பொடி - அரை டீஸ்பூன்
  6. உப்பு - தேவைகேற்ப
  7. எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  8. வெண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
  9. கடுகு - அரை டீஸ்பூன்
  10. உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
  11. கருவேபில்லை - கொஞ்சம்.
இந்த சாதம் செய்வது மிக மிக எளிது. அடுப்பில் கடாயில் எண்ணெய், vennai காய வைத்து, காய்ந்தவுடன் கடுகு போட்டு, வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேபில்லை, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும். இவை சிவந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும். பிறகு உப்பு போட்டு மெதுவாக கிளறிவிடவும். வேண்டுமென்றால் kothamalli தழை போட்டு பரிமாறலாம்.

Monday, March 10, 2008

Mixed Vegetable Rice

எல்லா வகையான காய்களையும்சேர்த்து செய்யும் ஒரு சாதம். இதற்கு தேவையான பொருட்கள்.

பாஸ்மதி அரிசி - ஒரு கப் (ஐந்து நிமிடம் நீரில் ஊறவைக்கவும்)
காரட் - ஒன்று - சிறிதாக நறுக்கியது.
பட்டாணி - மூன்று டேபிள் ஸ்பூன்
உருளைகிழங்கு - ஒன்று - சிறிதாக நறுக்கியது
வெங்காயம் - ஒன்று - பொடியாக நறுகியது
பூண்டு - ஒன்று - பொடியாக நறுகியது.
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு (தேவைக்கேற்ப)
முந்திரி பருப்பு - ஐந்து
துருவிய பாதாம் - ஐந்து
கொத்தமல்லி - கொஞ்சம்
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - ஒன்று
பட்டை - சிறிது
உப்பு - தேவைகேற்ப

ஊறிய அரிசியை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். குக்கர் எடுத்துக்கொண்டு அதில் முதலில் எண்ணெய் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் வெண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன், சீரகம், பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், கிராம்பு, ஏலக்காய்,பட்டை, பாதாம், முந்திரி, போட்டு சிவக்க வருக்கவேண்டும். சிவந்தவுடன் வெங்காயம் பூண்டு போட்டு ஒரு புரட்டு புரட்ட வேண்டும். பிறகு ஒவ்வொரு காயாக போட்டு வதக்க வேண்டும். சிறிது வதங்கியவுடன் வடிகட்டி வைத்துள்ள அரிசியை போட்டு சிறிது கிளறி ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கர் மூடி விடவும். ஒன்று அல்லது இரண்டு முறை விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். குக்கர் திறக்க வந்தவுடன், திறந்து மீதமுள்ள வெண்ணெய் போட்டு கொத்தமல்லி தூவி பரிமாறலாம். வெங்காய தயிர்பச்சடி,சிப்ஸ் வைத்து பரிமாறலாம்.

Friday, February 29, 2008

Lemon Rice

கலந்த சாதம் என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது லெமன் சாதம் அல்லது எலுமிச்சம்பழம் சாதம். மசக்கை நேரத்தில் வாய்க்கு இதமாகவும் வயிற்றிக்கு இதமாகவும் இருக்கும் ஒரு உணவு. இதற்கு தேவையான பொருட்கள்...

  1. அரிசி - ஒரு கப்
  2. எலுமிச்சம்பழம் - ஒன்று
  3. நல்லெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  4. கடுகு - ஒரு டீஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு - அறை டீஸ்பூன்
  6. கடலை பருப்பு - அறை டீஸ்பூன்
  7. வேர்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
  8. முந்திரி பருப்பு - ஐந்து
  9. கரிவேபில்லை - சிறிது
  10. மஞ்சள் பொடி - அறை டி ஸ்பூன்
  11. பெருங்காய பொடி - சிறிது
  12. பச்சை மிளகாய் - இரண்டு
  13. வெந்தயம் - கால் டீஸ்பூன்
  14. இஞ்சி - சிறிது
  15. உப்பு - தேவைக்கு
  16. கொத்தமல்லி - சிறிது

முதலில் அரிசியை அலம்பி குக்கரில் வைத்து வடிதுக்கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு அல்லது இரண்டேகால் கப் நீர் சேர்த்தால் போதும். கோழையா விடக்கூடாது. குக்கர் திறந்தவுடன் வெளியே எடுத்து ஒரு தட்டில் அல்லது ஒரு பெரிய அகலமான பத்திரத்தில் போட்டு ஆரவிடவேண்டும்.
ஒரு கடையில், என்னை விட்டு சூடானவுடன், கடுகு போட்டு வெடிக்க விடவேண்டும், வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, வெந்தயம், கடலை பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, வேர்கடலை, முந்திரி பருப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடிகருவேபில்லை ஆகியவற்றை போட்டு சிவக்க வருக்க வேண்டும். கரிய விடக்கூடாது. அடுப்பை அனைத்துவிட்டுஇந்த கலவையை ஆரிய சாடத்தில் கொட்டி, உப்பு போட்டு நன்றாக கிளரவேண்டும். சாதத்துடன் இவை அனைத்தும் நன்றாக கலக்க வேண்டும். கிளறும்போது சாதம் மசிந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிளரியவுடன், எலுமிச்சம்பழ ஜூஸ் எடுத்து அதன் மேல் விட்டு நன்றாக கிளறி, கொத்தமல்லி தழை போட்டு பரிமாற்ற வேண்டும்.

வருத்த கலவையுடன் சாதம் கலக்கும் பொது அடுப்பை அனைதுவிடுவது நல்லது. அடுப்பில் வைத்தே கலக்கும்போது சாதம் கொழயவும், எலுமிச்சம்பழம் ஜூஸ் கசக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Tomato Rice

தக்காளி சாதம் - எனக்கு பிடித்த கலந்த சாத வகைகளில் ஒன்று. தக்காளி சாதம் செய்வதற்கு மசாலா பொடியை விட ரச பொடியை உபயோகித்து செய்வது என் வழக்கம். இதற்கு தேவையான பொருட்கள்.

பாஸ்மதி அரிசி (அல்லது சாதரண அரிசி) - ஒரு கப்
தக்காளி - நான்கு(நன்றாக அலம்பி நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று (நன்றாக நறுக்கியது)
மஞ்சள் பொடி - அறை டீஸ்பூன்
ரச பொடி - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று (தேவைப்பட்டால்)
இஞ்சி - சிறிது
உப்பு - தேவையான அளவு
என்னை - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - ஐந்து
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - அறை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அறை டீஸ்பூன்
கடலை பருப்பு - அறை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
மல்லிதழை - சிறிது

அரிசியை பத்துநிமிடம் நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு குக்கரில் வைத்து வடிதுக்கொள்ள வேண்டும். குழைய விடக்கூடாது. அதற்கேற்றார் போல் குக்கர் ஐ அனைதுவிடவேண்டும். சாதம் திறக்க வந்தவுடன், எடுத்து வெளியில் வைத்து ஆற விட வேண்டும். இதற்கிடையில், ஒரு கடாயில் என்னை, வெண்ணெய் விட்டு கைந்தவுடன், கடுகு, பருப்புகள், பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். சிறிது சிவந்தவுடன், தக்காளியை போட்டு வதக்கவும், உடன் மஞ்சள் பொடி, ரசபோடி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும், நன்றாக வதங்கியவுடன், சாதத்தை போட்டு கவனமாக கிளர வேண்டும். சாதம் மசிந்து விடாமல் பார்த்து கிளரவேண்டும். இவை அனைத்தும் நன்றாக கலந்தவுடன் மல்லிதழை தூவி பரிமாறலாம்.

மசாலா வாசனையுடன் தக்காளி சாதம் வேண்டும் என்று நினைபவர்கள், தாளிக்கும் பொருட்களுடன், ஒரு பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கினால் நல்ல மசாலா வாசனையுடன் தக்காளி சாதம் ருசிக்கும்.

Coconut Rice

தேங்காய் சாதம் - கலந்த சாதம் வகைகளில் இதுவும் ஒன்று. இந்நாட்களில் தேங்காய் உடலுக்கு நல்லதல்ல என்ற காரணத்தால் நிறைய வீடுகளில் தேங்காய் சாதம் கலப்பதை தவிர்த்து விடுகின்றனர். கனு பதினெட்டம் பெருக்குபோன்ற நாட்களில் சிலர் இதை செய்கின்றனர். இதற்கு தேவையான பொருட்கள்.

  1. உதிரியாக வடித்த சாதம் - ஒன்றரை கப்
  2. துருவிய தேங்காய் - ஒரு கப்
  3. பச்சை மிளகாய் - இரண்டு
  4. இஞ்சி - சிறிய துண்டு
  5. எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  6. கடுகு -ஒரு டி ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
  8. கடலைபருப்பு - அரைடீஸ்பூன
  9. முந்திரி பருப்பு - ஐந்து அல்லது ஆறு.
  10. வேர் கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
  11. சிவப்பு மிளகாய் - ஒன்று
  12. உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:-
  1. கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
  2. உளுத்தம்பருப்பு - அரைடேபிள் ஸ்பூன்
  3. சிவப்பு மிளகாய் -
  4. வெள்ளை எள்ளு - இரண்டு டீஸ்பூன்
  5. பெருங்காயம் - சிறிது

முதலில் வறுப்பதற்கு கூறியபொருட்களை சிவக்க வறுத்துஆரிய பின் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு கடாயில் என்னை விட்டு, காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சிவப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு சிவக்க வருக்க வேண்டும். தீய விடக்கூடாது. இவை சிவந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு தேங்காயை போட்டு இரண்டு புரட்டு புரட்டினால் தேங்காய் சிவந்துவிடும்.

பிறகு இந்த கலவையை வடித்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி, தேவையான உப்பு போட்டு நன்றாக கலக்க வேண்டும். கலக்கும் போதுகவனமாக கலக்க வேண்டும். சாதம் மசிந்துவிடாமல் கலக்க வேண்டும். நன்றாக கலக்கியவுடன், மேல் கூறிய பொடித்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்றாக கலக்க வேண்டும். கருவேபில்லையை, கொதமல்லை தழை தூவி பரிமாறலாம்.