தக்காளி சாதம் - எனக்கு பிடித்த கலந்த சாத வகைகளில் ஒன்று. தக்காளி சாதம் செய்வதற்கு மசாலா பொடியை விட ரச பொடியை உபயோகித்து செய்வது என் வழக்கம். இதற்கு தேவையான பொருட்கள்.
பாஸ்மதி அரிசி (அல்லது சாதரண அரிசி) - ஒரு கப்
தக்காளி - நான்கு(நன்றாக அலம்பி நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று (நன்றாக நறுக்கியது)
மஞ்சள் பொடி - அறை டீஸ்பூன்
ரச பொடி - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று (தேவைப்பட்டால்)
இஞ்சி - சிறிது
உப்பு - தேவையான அளவு
என்னை - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - ஐந்து
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - அறை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அறை டீஸ்பூன்
கடலை பருப்பு - அறை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
மல்லிதழை - சிறிது
அரிசியை பத்துநிமிடம் நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு குக்கரில் வைத்து வடிதுக்கொள்ள வேண்டும். குழைய விடக்கூடாது. அதற்கேற்றார் போல் குக்கர் ஐ அனைதுவிடவேண்டும். சாதம் திறக்க வந்தவுடன், எடுத்து வெளியில் வைத்து ஆற விட வேண்டும். இதற்கிடையில், ஒரு கடாயில் என்னை, வெண்ணெய் விட்டு கைந்தவுடன், கடுகு, பருப்புகள், பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். சிறிது சிவந்தவுடன், தக்காளியை போட்டு வதக்கவும், உடன் மஞ்சள் பொடி, ரசபோடி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும், நன்றாக வதங்கியவுடன், சாதத்தை போட்டு கவனமாக கிளர வேண்டும். சாதம் மசிந்து விடாமல் பார்த்து கிளரவேண்டும். இவை அனைத்தும் நன்றாக கலந்தவுடன் மல்லிதழை தூவி பரிமாறலாம்.
மசாலா வாசனையுடன் தக்காளி சாதம் வேண்டும் என்று நினைபவர்கள், தாளிக்கும் பொருட்களுடன், ஒரு பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கினால் நல்ல மசாலா வாசனையுடன் தக்காளி சாதம் ருசிக்கும்.
10 years ago
0 comments:
Post a Comment