தேங்காய் சாதம் - கலந்த சாதம் வகைகளில் இதுவும் ஒன்று. இந்நாட்களில் தேங்காய் உடலுக்கு நல்லதல்ல என்ற காரணத்தால் நிறைய வீடுகளில் தேங்காய் சாதம் கலப்பதை தவிர்த்து விடுகின்றனர். கனு பதினெட்டம் பெருக்குபோன்ற நாட்களில் சிலர் இதை செய்கின்றனர். இதற்கு தேவையான பொருட்கள்.
- உதிரியாக வடித்த சாதம் - ஒன்றரை கப்
- துருவிய தேங்காய் - ஒரு கப்
- பச்சை மிளகாய் - இரண்டு
- இஞ்சி - சிறிய துண்டு
- எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
- கடுகு -ஒரு டி ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
- கடலைபருப்பு - அரைடீஸ்பூன
- முந்திரி பருப்பு - ஐந்து அல்லது ஆறு.
- வேர் கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - ஒன்று
- உப்பு - தேவையான அளவு
- கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - அரைடேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - ௩
- வெள்ளை எள்ளு - இரண்டு டீஸ்பூன்
- பெருங்காயம் - சிறிது
முதலில் வறுப்பதற்கு கூறியபொருட்களை சிவக்க வறுத்துஆரிய பின் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு கடாயில் என்னை விட்டு, காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சிவப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு சிவக்க வருக்க வேண்டும். தீய விடக்கூடாது. இவை சிவந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு தேங்காயை போட்டு இரண்டு புரட்டு புரட்டினால் தேங்காய் சிவந்துவிடும்.
பிறகு இந்த கலவையை வடித்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி, தேவையான உப்பு போட்டு நன்றாக கலக்க வேண்டும். கலக்கும் போதுகவனமாக கலக்க வேண்டும். சாதம் மசிந்துவிடாமல் கலக்க வேண்டும். நன்றாக கலக்கியவுடன், மேல் கூறிய பொடித்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்றாக கலக்க வேண்டும். கருவேபில்லையை, கொதமல்லை தழை தூவி பரிமாறலாம்.
0 comments:
Post a Comment