அடை - கேரளா ஐயர் வீடுகளில் வாரத்திற்கு ஒருமுறை செய்யும் மாலை நேர டிபன். தேவையான் பொருட்கள்:
- புழுங்கல் அரிசி - ஒரு கப்
- கடலை பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப் (1/3 cup)
- துவரம் பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப்
- கருப்பு உளுத்தம்பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப்
- மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - இரண்டு
- பெருங்காயம் - சிறிது
- கருவேபில்லை - சிறிது
- உப்பு - தேவைக்கு
- nallennai - oru adaikku irandu table spoon.
மேல் கூறிய பருப்பு வகைகள், மற்றும் மிளகு, மிளகாய் ஆகியவற்றை மூன்று மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு சிறிது நீர் சேர்த்து அரைக்க வேண்டும். தோசை மாவு அளவிற்கு நீர்க்க இருக்க கூடாது. அறைதவுடன் மாவில் பெருங்காயம் கருவேபில்லை சேர்த்து வார்க்கவும்.
இரும்பு தோசை கல்லில் (இரும்பில் வார்த்தால் நல்ல சுவையுடன் இருக்கும்), மாவை விட்டு நன்றாக பரத்தாவும். ஒரு டேபிள் ஸ்பூன் என்னை விட்டு வெந்து சிறிது சிவந்தவுடன் திருப்பி போட்டு மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் என்னை விட வேண்டும். அடை மொறுமொறுவென்று வரும்.
0 comments:
Post a Comment