Google

Wednesday, April 16, 2008

Vepampoo Rasam

வேப்பம்பூ - வயிற்றுக்கு மிகவும் நல்ல மருந்து. வயிற்று கடுப்பு இருப்பவர்கள் வேபம்பூவை நெய்யில் வறுத்து சாடத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் வயிறு சரியாகும் என்பது என் பாட்டிகூறுவது. வேப்பம்பூ ரசம் செய்ய தேவையான பொருட்கள்.

தக்காளி - இரண்டு
புளி- சிறு துண்டு (அல்லது ஒரு டீஸ்பூன் விழுது)
மஞ்சள் பொடி - அரைடீஸ்பூன்
ரசம் பொடி - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
துவரம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் (வேக வைத்துக்கொள்ளவும்)
வேப்பம்பூ - ஒரு டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கரிவேபில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

ஒரு பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி புளியை ஒரு கப் நீர் விட்டு கரைத்து புளி தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, ரசபொடி, உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தக்காளி வெந்தவுடன், நன்றாக மசித்து, அதனுடன் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் கரைத்து புளி தக்காளியுடன் விடவும். நுரைத்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சிறு கடாயில், அரை டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம், கரிவேபில்லை போட்டு சிவக்க வறுத்து ரசத்தின் மேல் கொட்டவும். மீண்டும் அதே கடையில் மீதமுள்ள நெய் விட்டு வேபம்பூவை நன்றாக கரிய வருக்கவேண்டும். கரிவதற்கு முன் அடுப்பை அணைத்து, வேபம்பூவை ரசத்தில் கொட்டவேண்டும். பிறகு கொத்தமல்லி போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கொத்தமல்லி, வேப்பம்பூ மற்றும் கரிவேபில்லை வாசனை ரசத்தில் இறங்கியவுடன் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

Wednesday, April 2, 2008

Tomato Rasam

இந்த ரசம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதற்கு தேவையான பொருட்கள்.

தக்காளி - இரண்டு
புளி- சிறு துண்டு (அல்லது ஒரு டீஸ்பூன் விழுது)
மஞ்சள் பொடி - அரைடீஸ்பூன்
ரசம் பொடி - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
துவரம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் (வேக வைத்துக்கொள்ளவும்)

தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கரிவேபில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

ஒரு பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி புளியை ஒரு கப் நீர் விட்டு கரைத்து புளி தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, ரசபொடி, உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தக்காளி வெந்தவுடன், நன்றாக மசித்து, அதனுடன் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் கரைத்து புளி தக்காளியுடன் விடவும். நுரைத்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சிறு கடாயில், நெய் விட்டு, கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம், கரிவேபில்லை போட்டு சிவக்க வறுத்து ரசத்தின் மேல் கொட்டவும். பிறகு கொத்தமல்லி போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கொத்தமல்லி மற்றும் கரிவேபில்லை வாசனை ரசத்தில் இறங்கியவுடன் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

Tuesday, April 1, 2008

Garlic Rice

கொழுப்பு - வயிற்று கடுப்பு இருக்கும் நேரத்தில் சாப்பிடும் ஒரு சாதம். கொழுப்பு பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வருவது நல்லது.

இதற்க்கு தேவையான பொருட்கள்
:-

  1. வடித்த சாதம் - ஒரு கப்
  2. பூண்டு - ஐந்து
  3. உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
  4. துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
  5. சிவப்பு மிளகாய் - இரண்டு
  6. நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  7. கல் உப்பு - தேவைகேற்ப
  8. துருவிய தேங்காய் - அரைடீஸ்பூன்.

ஒரு கடாயில், பருப்புகள், மிளகாய், கல் உப்பு தேங்காய் ஆகியவற்றை சிவக்க வருக்க வேண்டும். என்னைவிடாமல் வருக்க வேண்டும். பின்னர் பூண்டை அதே கடாயில் போட்டு இரண்டு நிமிடம் வறுக்கவும். இவை அனைத்தும் ஆறியவுடன் நன்றாக ப்லேண்டேரில் பொடியாக அரைக்கவும். ஒரு சிலர் விழுது போல் அரைப்பர்அப்படியும் அரைக்கலாம். பின்னர் வடித்த சாதத்தில் இந்த பொடியை போட்டு, நல்லெண்ணெய் விட்டு நன்றாக கலந்து பரிமாறலாம்.