Google

Tuesday, June 24, 2008

Thippili Rasam

திப்பிலி - உடல் வலி, சளி, ஜுரம் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது. இது திப்பிலி ரசம் செய்யும் முறை.

தேவையான பொருட்கள்:

திப்பிலி - ஒரு சிறிய துண்டு
தனிய - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டேபிள் ஸ்பூன்
பெருங்காய போடி - சிறிது
தக்காளி - ஒன்று
புளி- இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-

நெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது.

ஒரு கடாயில் திபில்லியை போட்டு நன்றாக வருக்க வேண்டும். ஆறியவுடன், தனிய, மிளகு, சீரகம், தக்காளி, ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு, ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, புளி விழுது, சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் போடி போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குறைந்தது பத்து நிமிடமாவது கொதிக்க வேண்டும் அப்பொழுது தான் திப்பிளியின் பச்ச வாசனை போகும். பிறகு தேவையான அளவு நீர் விட்டு, நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும். சிறு கடாயில், நெய் விட்டு, கடுகு வெந்தயம், பெருங்காயம், கருவேப்பில்லை போட்டு சிவந்தவுடன் ரசத்தில் கொட்ட வேண்டும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவேண்டும்.

ஜுரம் வந்து தேறியவர்கள் இதை வைத்து சாப்பிட்டால் உடல் வலி நிச்சயம் நீங்கும்.

Mysore Rasam

இது மற்றொரு வகை ரசம். இவ்வகை ரசம் செய்யும் முறை.

தேவையான் பொருட்க்கள்:-

தக்காளி - இரண்டு
துவரம் பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள்பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
மிளகு பொடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-
நெய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

முதலில் துவரம் பருப்பை சிறிது மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு, மஞ்சள்பொடி, உப்பு, மிளகு பொடி, பச்சை மிளகாய், தேவையான அளவு நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து, பச்ச வாசனை போனவுடன், வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் சேர்த்து, தக்காளியின் மேல் கொட்ட வேண்டும். நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விடலாம். ஒரு சிறிய கடையில், எண்ணெய், நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டு நன்றாக வறுபட்டவுடன்,ரசத்தின் மேல் கொட்டவும். கொத்தமல்லி தழை தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு சாதத்துடன் பரிமாறலாம்.

Sunday, June 22, 2008

Pineapple Rasam

எனக்கு பிடித்த ராசா வகைகளில் இது ஒன்று. செய்யும் முறை

தேவையான பொருட்க்கள்:-

பைனாப்பிள் - ஒரு நடுத்தர கப் அளவு ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
புளி - அறை டேபிள் ஸ்பூன்
பச்ச மிளகாய் - மூன்று
மஞ்சள் போடி - அறை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
ரசம்போடி - அரை டீஸ்பூன்

தாளிக்க:-
நெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது

முதலில் துவரம்பருப்பை மஞ்சள் போடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் முக்கள் கப் பைனாப்பிள் துண்டுகளை விழுது போல் அரிது அதிலிருந்து வடிகட்டி ஜூஸ் எடுத்துக்கொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள கால் பங்கு பைனாப்பிள் துண்டுகளை போட்டு, புளி விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு, பச்சமிளகாய், மஞ்சள்பொடி, ரசபோடி போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். முக்கால் பங்கு வெந்தவுடன், பைனாப்பிள் ஜூஸ் விட்டு மீண்டும் மூன்று நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெந்த துவரம்பருப்பை நீர்க்க விட்டு, நுரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும்.

தாளிக்கும் கடையில், நெய் விட்டு, கைந்தவுடன், கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்ட வேண்டும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

Garlic Rasam

இது மற்றொரு வகை ரசம். ரசபொடி இல்லாமல் செய்யக்கூடிய ரசம். காலை சமையலில் மீதம் இல்லாத பொழுது இரவு சாப்பாடுக்கு இதை செய்து சாப்பிடலாம். செய்யும் முறை.

தேவையான பொருட்கள்:-
தக்காளி - இரண்டு
தனியா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
poondu - இரண்டு துண்டு
உப்பு - தேவைகேற்ப
புளி - எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-

நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது

மேல் கூறிய அனைத்து பொருட்களையும் (மஞ்சல்போடிஉப்பு தவிர்த்து) மையாக அரைத்துகொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, மஞ்சள் பொடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்ததும், பச்சவாசனை போனதும், மீண்டும் ஒன்று அல்லது ஒன்றரை கப் தணீர் விடவேண்டும். நன்றாக நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு சிறு தவாவில், நெய்விட்டு, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, பெருங்காயம் போட்டு நன்றாக சிவந்தவுடன் ரசத்தில் கொட்டவேண்டும். கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறலாம். காலை முதல் மாலை வரை வேலை செய்து களைத்து வருபவர்கள் இந்த ரசம் வைத்து சாபிட்டால் உடல் வலி நிச்சயமாக நீங்கும்.