எல்லா வகையான காய்களையும்சேர்த்து செய்யும் ஒரு சாதம். இதற்கு தேவையான பொருட்கள்.
பாஸ்மதி அரிசி - ஒரு கப் (ஐந்து நிமிடம் நீரில் ஊறவைக்கவும்)
காரட் - ஒன்று - சிறிதாக நறுக்கியது.
பட்டாணி - மூன்று டேபிள் ஸ்பூன்
உருளைகிழங்கு - ஒன்று - சிறிதாக நறுக்கியது
வெங்காயம் - ஒன்று - பொடியாக நறுகியது
பூண்டு - ஒன்று - பொடியாக நறுகியது.
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு (தேவைக்கேற்ப)
முந்திரி பருப்பு - ஐந்து
துருவிய பாதாம் - ஐந்து
கொத்தமல்லி - கொஞ்சம்
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - ஒன்று
பட்டை - சிறிது
உப்பு - தேவைகேற்ப
ஊறிய அரிசியை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். குக்கர் எடுத்துக்கொண்டு அதில் முதலில் எண்ணெய் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் வெண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன், சீரகம், பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், கிராம்பு, ஏலக்காய்,பட்டை, பாதாம், முந்திரி, போட்டு சிவக்க வருக்கவேண்டும். சிவந்தவுடன் வெங்காயம் பூண்டு போட்டு ஒரு புரட்டு புரட்ட வேண்டும். பிறகு ஒவ்வொரு காயாக போட்டு வதக்க வேண்டும். சிறிது வதங்கியவுடன் வடிகட்டி வைத்துள்ள அரிசியை போட்டு சிறிது கிளறி ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கர் மூடி விடவும். ஒன்று அல்லது இரண்டு முறை விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். குக்கர் திறக்க வந்தவுடன், திறந்து மீதமுள்ள வெண்ணெய் போட்டு கொத்தமல்லி தூவி பரிமாறலாம். வெங்காய தயிர்பச்சடி,சிப்ஸ் வைத்து பரிமாறலாம்.
11 years ago
0 comments:
Post a Comment