Google

Friday, July 18, 2008

Kollu Rasam

கொள்ளு - உடல் இளைக்க உபயோகப்படுத்தும் ஒரு பொருள். கொள்ளின் மூலம், ரசம், துவையல் ஆகியவை செய்ய இயலும். கொள்ளு ரசம் செய்யும் முறை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-
கொள்ளு - இரண்டு டீஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 1 1/௨
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிறிது நேரம் சிவக்க வருக்க வேண்டும். ஆறியவுடன், கொள்ளுடன், தனியா, முக்கள் தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை vizhuthaaga அரைக்கவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஏழு நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு நுரைத்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். தாளிக்கும் சட்டியில், எண்ணெய் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும். கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு அருந்தலாம்.

Tuesday, June 24, 2008

Thippili Rasam

திப்பிலி - உடல் வலி, சளி, ஜுரம் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது. இது திப்பிலி ரசம் செய்யும் முறை.

தேவையான பொருட்கள்:

திப்பிலி - ஒரு சிறிய துண்டு
தனிய - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டேபிள் ஸ்பூன்
பெருங்காய போடி - சிறிது
தக்காளி - ஒன்று
புளி- இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-

நெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிது.

ஒரு கடாயில் திபில்லியை போட்டு நன்றாக வருக்க வேண்டும். ஆறியவுடன், தனிய, மிளகு, சீரகம், தக்காளி, ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு, ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, புளி விழுது, சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் போடி போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குறைந்தது பத்து நிமிடமாவது கொதிக்க வேண்டும் அப்பொழுது தான் திப்பிளியின் பச்ச வாசனை போகும். பிறகு தேவையான அளவு நீர் விட்டு, நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும். சிறு கடாயில், நெய் விட்டு, கடுகு வெந்தயம், பெருங்காயம், கருவேப்பில்லை போட்டு சிவந்தவுடன் ரசத்தில் கொட்ட வேண்டும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவேண்டும்.

ஜுரம் வந்து தேறியவர்கள் இதை வைத்து சாப்பிட்டால் உடல் வலி நிச்சயம் நீங்கும்.

Mysore Rasam

இது மற்றொரு வகை ரசம். இவ்வகை ரசம் செய்யும் முறை.

தேவையான் பொருட்க்கள்:-

தக்காளி - இரண்டு
துவரம் பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள்பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
மிளகு பொடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-
நெய் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

முதலில் துவரம் பருப்பை சிறிது மஞ்சள் பொடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு, மஞ்சள்பொடி, உப்பு, மிளகு பொடி, பச்சை மிளகாய், தேவையான அளவு நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்து, பச்ச வாசனை போனவுடன், வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் சேர்த்து, தக்காளியின் மேல் கொட்ட வேண்டும். நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விடலாம். ஒரு சிறிய கடையில், எண்ணெய், நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டு நன்றாக வறுபட்டவுடன்,ரசத்தின் மேல் கொட்டவும். கொத்தமல்லி தழை தூவி சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு சாதத்துடன் பரிமாறலாம்.

Sunday, June 22, 2008

Pineapple Rasam

எனக்கு பிடித்த ராசா வகைகளில் இது ஒன்று. செய்யும் முறை

தேவையான பொருட்க்கள்:-

பைனாப்பிள் - ஒரு நடுத்தர கப் அளவு ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
புளி - அறை டேபிள் ஸ்பூன்
பச்ச மிளகாய் - மூன்று
மஞ்சள் போடி - அறை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
ரசம்போடி - அரை டீஸ்பூன்

தாளிக்க:-
நெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது

முதலில் துவரம்பருப்பை மஞ்சள் போடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் முக்கள் கப் பைனாப்பிள் துண்டுகளை விழுது போல் அரிது அதிலிருந்து வடிகட்டி ஜூஸ் எடுத்துக்கொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள கால் பங்கு பைனாப்பிள் துண்டுகளை போட்டு, புளி விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு, பச்சமிளகாய், மஞ்சள்பொடி, ரசபோடி போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். முக்கால் பங்கு வெந்தவுடன், பைனாப்பிள் ஜூஸ் விட்டு மீண்டும் மூன்று நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெந்த துவரம்பருப்பை நீர்க்க விட்டு, நுரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும்.

தாளிக்கும் கடையில், நெய் விட்டு, கைந்தவுடன், கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ரசத்தில் கொட்ட வேண்டும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

Garlic Rasam

இது மற்றொரு வகை ரசம். ரசபொடி இல்லாமல் செய்யக்கூடிய ரசம். காலை சமையலில் மீதம் இல்லாத பொழுது இரவு சாப்பாடுக்கு இதை செய்து சாப்பிடலாம். செய்யும் முறை.

தேவையான பொருட்கள்:-
தக்காளி - இரண்டு
தனியா விதை - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
poondu - இரண்டு துண்டு
உப்பு - தேவைகேற்ப
புளி - எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்.

தாளிக்க:-

நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது

மேல் கூறிய அனைத்து பொருட்களையும் (மஞ்சல்போடிஉப்பு தவிர்த்து) மையாக அரைத்துகொள்ளவும். ரசம் வைக்கும் பாத்திரத்தில், இந்த விழுதை போட்டு, ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, மஞ்சள் பொடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்ததும், பச்சவாசனை போனதும், மீண்டும் ஒன்று அல்லது ஒன்றரை கப் தணீர் விடவேண்டும். நன்றாக நுரைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு சிறு தவாவில், நெய்விட்டு, காய்ந்தவுடன், கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, பெருங்காயம் போட்டு நன்றாக சிவந்தவுடன் ரசத்தில் கொட்டவேண்டும். கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறலாம். காலை முதல் மாலை வரை வேலை செய்து களைத்து வருபவர்கள் இந்த ரசம் வைத்து சாபிட்டால் உடல் வலி நிச்சயமாக நீங்கும்.

Wednesday, April 16, 2008

Vepampoo Rasam

வேப்பம்பூ - வயிற்றுக்கு மிகவும் நல்ல மருந்து. வயிற்று கடுப்பு இருப்பவர்கள் வேபம்பூவை நெய்யில் வறுத்து சாடத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் வயிறு சரியாகும் என்பது என் பாட்டிகூறுவது. வேப்பம்பூ ரசம் செய்ய தேவையான பொருட்கள்.

தக்காளி - இரண்டு
புளி- சிறு துண்டு (அல்லது ஒரு டீஸ்பூன் விழுது)
மஞ்சள் பொடி - அரைடீஸ்பூன்
ரசம் பொடி - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
துவரம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் (வேக வைத்துக்கொள்ளவும்)
வேப்பம்பூ - ஒரு டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கரிவேபில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

ஒரு பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி புளியை ஒரு கப் நீர் விட்டு கரைத்து புளி தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, ரசபொடி, உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தக்காளி வெந்தவுடன், நன்றாக மசித்து, அதனுடன் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் கரைத்து புளி தக்காளியுடன் விடவும். நுரைத்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சிறு கடாயில், அரை டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம், கரிவேபில்லை போட்டு சிவக்க வறுத்து ரசத்தின் மேல் கொட்டவும். மீண்டும் அதே கடையில் மீதமுள்ள நெய் விட்டு வேபம்பூவை நன்றாக கரிய வருக்கவேண்டும். கரிவதற்கு முன் அடுப்பை அணைத்து, வேபம்பூவை ரசத்தில் கொட்டவேண்டும். பிறகு கொத்தமல்லி போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கொத்தமல்லி, வேப்பம்பூ மற்றும் கரிவேபில்லை வாசனை ரசத்தில் இறங்கியவுடன் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

Wednesday, April 2, 2008

Tomato Rasam

இந்த ரசம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதற்கு தேவையான பொருட்கள்.

தக்காளி - இரண்டு
புளி- சிறு துண்டு (அல்லது ஒரு டீஸ்பூன் விழுது)
மஞ்சள் பொடி - அரைடீஸ்பூன்
ரசம் பொடி - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
துவரம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் (வேக வைத்துக்கொள்ளவும்)

தாளிக்க:-
நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கரிவேபில்லை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

ஒரு பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி புளியை ஒரு கப் நீர் விட்டு கரைத்து புளி தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, ரசபொடி, உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தக்காளி வெந்தவுடன், நன்றாக மசித்து, அதனுடன் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சிறிது நீர் கரைத்து புளி தக்காளியுடன் விடவும். நுரைத்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சிறு கடாயில், நெய் விட்டு, கடுகு போட்டு, வெடித்தவுடன், வெந்தயம், பெருங்காயம், கரிவேபில்லை போட்டு சிவக்க வறுத்து ரசத்தின் மேல் கொட்டவும். பிறகு கொத்தமல்லி போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கொத்தமல்லி மற்றும் கரிவேபில்லை வாசனை ரசத்தில் இறங்கியவுடன் சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

Tuesday, April 1, 2008

Garlic Rice

கொழுப்பு - வயிற்று கடுப்பு இருக்கும் நேரத்தில் சாப்பிடும் ஒரு சாதம். கொழுப்பு பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வருவது நல்லது.

இதற்க்கு தேவையான பொருட்கள்
:-

  1. வடித்த சாதம் - ஒரு கப்
  2. பூண்டு - ஐந்து
  3. உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
  4. துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
  5. சிவப்பு மிளகாய் - இரண்டு
  6. நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
  7. கல் உப்பு - தேவைகேற்ப
  8. துருவிய தேங்காய் - அரைடீஸ்பூன்.

ஒரு கடாயில், பருப்புகள், மிளகாய், கல் உப்பு தேங்காய் ஆகியவற்றை சிவக்க வருக்க வேண்டும். என்னைவிடாமல் வருக்க வேண்டும். பின்னர் பூண்டை அதே கடாயில் போட்டு இரண்டு நிமிடம் வறுக்கவும். இவை அனைத்தும் ஆறியவுடன் நன்றாக ப்லேண்டேரில் பொடியாக அரைக்கவும். ஒரு சிலர் விழுது போல் அரைப்பர்அப்படியும் அரைக்கலாம். பின்னர் வடித்த சாதத்தில் இந்த பொடியை போட்டு, நல்லெண்ணெய் விட்டு நன்றாக கலந்து பரிமாறலாம்.

Sunday, March 16, 2008

Ginger Rice

இஞ்சி சாதம் - இஞ்சி தொண்டைக்கு மிகவும் இதமான ஒரு மருந்து. ஒரு புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட ஒரு வகை சாதம். இதற்கு தேவையான பொருட்கள்.

  1. உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
  2. thuruviya inji - nangu டேபிள் ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் - இரண்டு (தேவையான அளவு)
  4. வெங்காயம் - அரை (நன்றாக நறுக்கியது)
  5. மஞ்சள்பொடி - அரை டீஸ்பூன்
  6. உப்பு - தேவைகேற்ப
  7. எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  8. வெண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
  9. கடுகு - அரை டீஸ்பூன்
  10. உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
  11. கருவேபில்லை - கொஞ்சம்.
இந்த சாதம் செய்வது மிக மிக எளிது. அடுப்பில் கடாயில் எண்ணெய், vennai காய வைத்து, காய்ந்தவுடன் கடுகு போட்டு, வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேபில்லை, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும். இவை சிவந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும். பிறகு உப்பு போட்டு மெதுவாக கிளறிவிடவும். வேண்டுமென்றால் kothamalli தழை போட்டு பரிமாறலாம்.

Monday, March 10, 2008

Mixed Vegetable Rice

எல்லா வகையான காய்களையும்சேர்த்து செய்யும் ஒரு சாதம். இதற்கு தேவையான பொருட்கள்.

பாஸ்மதி அரிசி - ஒரு கப் (ஐந்து நிமிடம் நீரில் ஊறவைக்கவும்)
காரட் - ஒன்று - சிறிதாக நறுக்கியது.
பட்டாணி - மூன்று டேபிள் ஸ்பூன்
உருளைகிழங்கு - ஒன்று - சிறிதாக நறுக்கியது
வெங்காயம் - ஒன்று - பொடியாக நறுகியது
பூண்டு - ஒன்று - பொடியாக நறுகியது.
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு (தேவைக்கேற்ப)
முந்திரி பருப்பு - ஐந்து
துருவிய பாதாம் - ஐந்து
கொத்தமல்லி - கொஞ்சம்
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - ஒன்று
பட்டை - சிறிது
உப்பு - தேவைகேற்ப

ஊறிய அரிசியை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். குக்கர் எடுத்துக்கொண்டு அதில் முதலில் எண்ணெய் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் வெண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன், சீரகம், பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், கிராம்பு, ஏலக்காய்,பட்டை, பாதாம், முந்திரி, போட்டு சிவக்க வருக்கவேண்டும். சிவந்தவுடன் வெங்காயம் பூண்டு போட்டு ஒரு புரட்டு புரட்ட வேண்டும். பிறகு ஒவ்வொரு காயாக போட்டு வதக்க வேண்டும். சிறிது வதங்கியவுடன் வடிகட்டி வைத்துள்ள அரிசியை போட்டு சிறிது கிளறி ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கர் மூடி விடவும். ஒன்று அல்லது இரண்டு முறை விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். குக்கர் திறக்க வந்தவுடன், திறந்து மீதமுள்ள வெண்ணெய் போட்டு கொத்தமல்லி தூவி பரிமாறலாம். வெங்காய தயிர்பச்சடி,சிப்ஸ் வைத்து பரிமாறலாம்.

Friday, February 29, 2008

Lemon Rice

கலந்த சாதம் என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது லெமன் சாதம் அல்லது எலுமிச்சம்பழம் சாதம். மசக்கை நேரத்தில் வாய்க்கு இதமாகவும் வயிற்றிக்கு இதமாகவும் இருக்கும் ஒரு உணவு. இதற்கு தேவையான பொருட்கள்...

  1. அரிசி - ஒரு கப்
  2. எலுமிச்சம்பழம் - ஒன்று
  3. நல்லெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  4. கடுகு - ஒரு டீஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு - அறை டீஸ்பூன்
  6. கடலை பருப்பு - அறை டீஸ்பூன்
  7. வேர்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
  8. முந்திரி பருப்பு - ஐந்து
  9. கரிவேபில்லை - சிறிது
  10. மஞ்சள் பொடி - அறை டி ஸ்பூன்
  11. பெருங்காய பொடி - சிறிது
  12. பச்சை மிளகாய் - இரண்டு
  13. வெந்தயம் - கால் டீஸ்பூன்
  14. இஞ்சி - சிறிது
  15. உப்பு - தேவைக்கு
  16. கொத்தமல்லி - சிறிது

முதலில் அரிசியை அலம்பி குக்கரில் வைத்து வடிதுக்கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு அல்லது இரண்டேகால் கப் நீர் சேர்த்தால் போதும். கோழையா விடக்கூடாது. குக்கர் திறந்தவுடன் வெளியே எடுத்து ஒரு தட்டில் அல்லது ஒரு பெரிய அகலமான பத்திரத்தில் போட்டு ஆரவிடவேண்டும்.
ஒரு கடையில், என்னை விட்டு சூடானவுடன், கடுகு போட்டு வெடிக்க விடவேண்டும், வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, வெந்தயம், கடலை பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, வேர்கடலை, முந்திரி பருப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடிகருவேபில்லை ஆகியவற்றை போட்டு சிவக்க வருக்க வேண்டும். கரிய விடக்கூடாது. அடுப்பை அனைத்துவிட்டுஇந்த கலவையை ஆரிய சாடத்தில் கொட்டி, உப்பு போட்டு நன்றாக கிளரவேண்டும். சாதத்துடன் இவை அனைத்தும் நன்றாக கலக்க வேண்டும். கிளறும்போது சாதம் மசிந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிளரியவுடன், எலுமிச்சம்பழ ஜூஸ் எடுத்து அதன் மேல் விட்டு நன்றாக கிளறி, கொத்தமல்லி தழை போட்டு பரிமாற்ற வேண்டும்.

வருத்த கலவையுடன் சாதம் கலக்கும் பொது அடுப்பை அனைதுவிடுவது நல்லது. அடுப்பில் வைத்தே கலக்கும்போது சாதம் கொழயவும், எலுமிச்சம்பழம் ஜூஸ் கசக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Tomato Rice

தக்காளி சாதம் - எனக்கு பிடித்த கலந்த சாத வகைகளில் ஒன்று. தக்காளி சாதம் செய்வதற்கு மசாலா பொடியை விட ரச பொடியை உபயோகித்து செய்வது என் வழக்கம். இதற்கு தேவையான பொருட்கள்.

பாஸ்மதி அரிசி (அல்லது சாதரண அரிசி) - ஒரு கப்
தக்காளி - நான்கு(நன்றாக அலம்பி நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று (நன்றாக நறுக்கியது)
மஞ்சள் பொடி - அறை டீஸ்பூன்
ரச பொடி - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று (தேவைப்பட்டால்)
இஞ்சி - சிறிது
உப்பு - தேவையான அளவு
என்னை - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - ஐந்து
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - அறை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அறை டீஸ்பூன்
கடலை பருப்பு - அறை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
மல்லிதழை - சிறிது

அரிசியை பத்துநிமிடம் நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு குக்கரில் வைத்து வடிதுக்கொள்ள வேண்டும். குழைய விடக்கூடாது. அதற்கேற்றார் போல் குக்கர் ஐ அனைதுவிடவேண்டும். சாதம் திறக்க வந்தவுடன், எடுத்து வெளியில் வைத்து ஆற விட வேண்டும். இதற்கிடையில், ஒரு கடாயில் என்னை, வெண்ணெய் விட்டு கைந்தவுடன், கடுகு, பருப்புகள், பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். சிறிது சிவந்தவுடன், தக்காளியை போட்டு வதக்கவும், உடன் மஞ்சள் பொடி, ரசபோடி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும், நன்றாக வதங்கியவுடன், சாதத்தை போட்டு கவனமாக கிளர வேண்டும். சாதம் மசிந்து விடாமல் பார்த்து கிளரவேண்டும். இவை அனைத்தும் நன்றாக கலந்தவுடன் மல்லிதழை தூவி பரிமாறலாம்.

மசாலா வாசனையுடன் தக்காளி சாதம் வேண்டும் என்று நினைபவர்கள், தாளிக்கும் பொருட்களுடன், ஒரு பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கினால் நல்ல மசாலா வாசனையுடன் தக்காளி சாதம் ருசிக்கும்.

Coconut Rice

தேங்காய் சாதம் - கலந்த சாதம் வகைகளில் இதுவும் ஒன்று. இந்நாட்களில் தேங்காய் உடலுக்கு நல்லதல்ல என்ற காரணத்தால் நிறைய வீடுகளில் தேங்காய் சாதம் கலப்பதை தவிர்த்து விடுகின்றனர். கனு பதினெட்டம் பெருக்குபோன்ற நாட்களில் சிலர் இதை செய்கின்றனர். இதற்கு தேவையான பொருட்கள்.

  1. உதிரியாக வடித்த சாதம் - ஒன்றரை கப்
  2. துருவிய தேங்காய் - ஒரு கப்
  3. பச்சை மிளகாய் - இரண்டு
  4. இஞ்சி - சிறிய துண்டு
  5. எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  6. கடுகு -ஒரு டி ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
  8. கடலைபருப்பு - அரைடீஸ்பூன
  9. முந்திரி பருப்பு - ஐந்து அல்லது ஆறு.
  10. வேர் கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
  11. சிவப்பு மிளகாய் - ஒன்று
  12. உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:-
  1. கடலை பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
  2. உளுத்தம்பருப்பு - அரைடேபிள் ஸ்பூன்
  3. சிவப்பு மிளகாய் -
  4. வெள்ளை எள்ளு - இரண்டு டீஸ்பூன்
  5. பெருங்காயம் - சிறிது

முதலில் வறுப்பதற்கு கூறியபொருட்களை சிவக்க வறுத்துஆரிய பின் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு கடாயில் என்னை விட்டு, காய்ந்தவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சிவப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு சிவக்க வருக்க வேண்டும். தீய விடக்கூடாது. இவை சிவந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு தேங்காயை போட்டு இரண்டு புரட்டு புரட்டினால் தேங்காய் சிவந்துவிடும்.

பிறகு இந்த கலவையை வடித்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி, தேவையான உப்பு போட்டு நன்றாக கலக்க வேண்டும். கலக்கும் போதுகவனமாக கலக்க வேண்டும். சாதம் மசிந்துவிடாமல் கலக்க வேண்டும். நன்றாக கலக்கியவுடன், மேல் கூறிய பொடித்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்றாக கலக்க வேண்டும். கருவேபில்லையை, கொதமல்லை தழை தூவி பரிமாறலாம்.

Wednesday, February 27, 2008

Adai

அடை - கேரளா ஐயர் வீடுகளில் வாரத்திற்கு ஒருமுறை செய்யும் மாலை நேர டிபன். தேவையான் பொருட்கள்:

  1. புழுங்கல் அரிசி - ஒரு கப்
  2. கடலை பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப் (1/3 cup)
  3. துவரம் பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப்
  4. கருப்பு உளுத்தம்பருப்பு - மூன்றில் ஒரு பங்கு கப்
  5. மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
  6. சிவப்பு மிளகாய் - இரண்டு
  7. பெருங்காயம் - சிறிது
  8. கருவேபில்லை - சிறிது
  9. உப்பு - தேவைக்கு
  10. nallennai - oru adaikku irandu table spoon.

மேல் கூறிய பருப்பு வகைகள், மற்றும் மிளகு, மிளகாய் ஆகியவற்றை மூன்று மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு சிறிது நீர் சேர்த்து அரைக்க வேண்டும். தோசை மாவு அளவிற்கு நீர்க்க இருக்க கூடாது. அறைதவுடன் மாவில் பெருங்காயம் கருவேபில்லை சேர்த்து வார்க்கவும்.

இரும்பு தோசை கல்லில் (இரும்பில் வார்த்தால் நல்ல சுவையுடன் இருக்கும்), மாவை விட்டு நன்றாக பரத்தாவும். ஒரு டேபிள் ஸ்பூன் என்னை விட்டு வெந்து சிறிது சிவந்தவுடன் திருப்பி போட்டு மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் என்னை விட வேண்டும். அடை மொறுமொறுவென்று வரும்.

Monday, February 25, 2008

Rava Dosai

ரவா தோசை எனக்கு பிடித்த மாலை நேர டிபன். நாம் மாலை ரவா தோசை செய்ய வேண்டும் என்றால் காலையிலேயே இதற்கு தேவையான மாவை கரைத்து வைத்து விடுவது நல்லது. இதற்கு தேவையான பொருட்கள்.

  1. அரிசி மாவு - ஒரு கப்.
  2. ரவை - ஒரு கப்
  3. மைதா - முக்கால் கப்
  4. உப்பு - தேவையான அளவு
  5. புளித்த மோர் - நான்கு டேபிள் ஸ்பூன்.
தாளிக்க : -
  1. என்னை - ஒரு டேபிள் ஸ்பூன்
  2. வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கவும்)
  3. கடுகு - அறை டீஸ்பூன்
  4. சீரகம் - அறை டீஸ்பூன்.
  5. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  6. பச்சை மிளகாய் - ஒன்று (அல்லது தேவையான அளவு)
  7. karuvepillai - சிறிது
மேல் கூறிய அனைத்து மாவையும் உப்பு போட்டு நன்றாக கரைத்து வைத்து விட வேண்டும். மோரையும் சேர்த்து கரைத்து வைக்கவும். தோசைவார்க்க சிறிது நேரத்திற்கு முன் கடாயில் என்னை விட்டு, என்னை காய்ந்தவுடன் கடுகு, பச்சை மிளகாய், கரிவேபில்லை, சீரகம், வெங்காயம், பெருங்காயதூள் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். இவை சிவந்தவுடன் கரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலக்கவும். தேவை என்றால் நீர் சேர்த்துக்கொள்ளலாம். ரவா தோசை மாவு நன்றாக நீர்க்க இருக்க வேண்டும். தோசை மாவை விட நீர்க்க இருக்க வேண்டும். கல் நன்றாக காய்ந்தவுடன் மாவை ஓரத்திலிருந்து நடுவரை சுற்றி விட வேண்டும். என்னை விட்டு ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு மீண்டும் சிறிது என்னை விட வேண்டும். தோசை வார்ப்பது போல் நடுவிலிருந்து தோசை வார்க்க ஆரம்பிக்க கூடாது.

ஒரு சிலர் என்னைக்கு பதில் நெய் விட்டு ரவா தோசை வார்பர். நமக்கு எப்படி பிடிக்கிறதோ அப்படி வார்துக்கொள்ளலம்.



Dosai Milagai Podi

மிளகாய் பொடி - தென் இந்தியர்களுக்கு இன்றியமையாதது. தேவையான பொருட்கள்.

  1. கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்.
  2. கடலை பருப்பு - ஒரு பிடி
  3. உளுத்தம்பருப்பு - முக்கால் பிடி
  4. வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
  5. சுக்கு - ஒரு டீஸ்பூன்
  6. வெள்ளை எள்ளு - மூன்று ஸ்பூன்
  7. சிவப்பு மிளகாய் - இருவது
  8. புளி- ஒரு சிறிய துண்டு
  9. வெல்லம்- ஒரு டேபிள் ஸ்பூன்.

முதலில் கடாயில் எண்ணெய் சிறிது விட்டு புளி மற்றும் வெள்ளத்தை தவிர ஒவ்வொன்றாக சிவக்க வறுக்கவும். சிறிது நேரம் ஆற வைக்கவும். ஆறியவுடன் புளியையும், வெல்லத்தையும் சேர்த்து நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளலாம். மேல் கூறிய அளவு, தினமும் உபயோகப்படுத்தினால் இரண்டு வாரமும், அல்லது ஒரு மாதமும் வரும்.

Wednesday, February 20, 2008

Curry Powder

இந்த கறிபொடி எல்லா விதமான கறிகளுக்கும் உபயோகப்படுத்தலாம். இதற்கு தேவையான பொருட்கள்.

  1. தனியா - அரை கப்
  2. மிளகு - கால் கப்
  3. சீரகம் - கால் கப்
  4. கடலைபருப்பு - அரை கப்
  5. உளுத்தம்பருப்பு - அரை கப்
  6. சிவப்பு மிளகாய் வத்தல் - பத்து
  7. வேர்கடலை - கால் கப்
  8. மஞ்சள் பொடி - இரண்டு டீஸ்பூன்
  9. பெருங்காயதூள் - சிறிது.

மேல் கூறிய அனைத்து பொருட்களையும் ஒவொன்றாக கடாயில் சிவக்க வறுக்கவும். கரிய விட கூடாது. ஆறியவுடன் நன்றாக அரிது வைத்துக் கொள்ளவும். விருபபட்டால் ஒரு கப் கறிவேப்பில்லை இலையை இதனுடன் வறுத்து சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளலாம். இந்த கறி பொடி எல்லா விதமான கரிகளுக்கும் பயன் படுத்தலாம். உருளை, சேனை, செபங்கிழங்கு, பீன்ஸ், வெண்டைக்காய், காராமணி இப்படி எல்லாவற்றிக்கும் பயன் படுத்தலாம்.

Rasam Powder

ரசம் - கேரள ஐயர் வீடுகளில் தனியாக ரசபொடி செய்து ரசம் செய்ய மாட்டார்கள். சாம்பார் பொடியயே ரசத்திற்கும் உபயோகபடுத்துவர். தமிழ்நாடு வீடுகளில் ரசபொடிசெய்து ரசம் செய்வர். ரசபொடிக்கு தேவையான பொருட்கள்.

  1. தனியா - கால் கப்.
  2. சிவப்பு மிளகாய் வத்தல் - ஒரு சிறிய கப்.
  3. மிளகு - இரண்டு டேபிள் ஸ்பூன்.
  4. சீரகம் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  5. வெந்தியம் - கால் டேபிள் ஸ்பூன்.
  6. கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்.
  7. துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
  8. விரளிமஞ்சள் - ஒரு சிறிய துண்டு
  9. பெருங்காய பொடி - இரண்டு அல்லது மூன்று சிட்டிகை.
ஒரு கடையில் மேல் கூறிய அனைத்தையும் ஒவ்வொன்றாக வறுக்கவும். கரிய விடக் கூடாது. சிவந்தவுடன் தனியாக ஒரு தட்டில் எடுத்து கொட்டி ஆற விடவும். ஆரியவுடன் நன்றாக பொடியாக அரைத்துவைத்துக் கொள்ளவும். பதினைந்து நாளுக்கு ஒரு முறை அரைத்து வைத்துக் கொண்டால் ரசம் மிகவும் வாசனையுடன் சுவையாக இருக்கும். நிறைய அரைத்து வைத்துக் கொள்பவர்கள், சிறிது வெளியே வைத்துக் கொண்டு மீதியை பிரீசெரில் வைத்துக் கொள்ளலாம்.

Tuesday, February 19, 2008

Pongal

மற்றொரு காலை உணவு. இதற்கு தேவையான பொருட்கள்.

  1. அரிசி - ஒரு கப்
  2. பயத்தம்பருப்பு - கால் கப்
  3. மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
  4. இஞ்சி -ஒரு சிறிய துண்டு
  5. மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
  6. சீரகம் - அறை டேபிள் ஸ்பூன்
  7. கடுகு - அரை டீஸ்பூன்
  8. பெருங்காய பொடி - சிறிது
  9. எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  10. நெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  11. உப்பு - தேவையான அளவு
  12. முந்திரி பருப்பு -தேவைகேற்ப
  13. கரிவேபில்லை - ஒரு கொத்து
முதலில் அரிசியையும், பயத்தம் பருப்பையும் நன்றாக அலம்பி, ஒரு பத்துநிமிடம் ஊற வைக்கவும். பிறகு ஒரு பிரஷர் குக்கர் எடுத்துக்கொண்டு முதலில் எண்ணெயையும், ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யையும் விட்டு சூடானவுடன், கடுகு போட்டு வெடித்தவுடன், இஞ்சி, மிளகு, சீரகம் பெருங்கயபோடி கறிவேப்பில்லை ஆகியவற்றை போட்டு வறுக்கவும். சிவந்தவுடன் அரிசியையும் பருப்பையும் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு குக்கர்ஐ மூடவும். ஐந்திலிருந்து ஆறுமுறை கத்த விடவும். ஒரு கப் அரிசிக்கு ஐந்து கப் நீர் விடலாம். குக்கர் திறக்க வந்தவுடன் திறந்து மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யையும் விட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். கமகமக்கும் பொங்கல் தயார். தேங்காய் சட்னி அல்லது கொத்சு சேர்த்து சூடாக சாப்பிடலாம்.

Dosai

மற்றொரு காலை உணவு. கிட்டதட்ட இட்லி போலவே இருக்கும் இதற்கு தேவையான பொருட்கள்.

  • புழுங்கல் அரிசி - நான்கு கப்
  • முழு உளுத்தம்பருப்பு - ஒரு கப்
  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்.
  • உப்பு - தேவையான அளவு

    அரிசியை முதலில் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . அதே போல் உளுத்தம்பருப்பையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் க்ரிண்டேரில் உளுத்தம்பருப்பு வேந்திய கலவையை போட்டு அரைக்க விட வேண்டும். சிறிது சிறிதாக நீர் சேர்த்துக்கொள்ள வேண்தும். உளுத்தம்பருப்பு நிறைய நீர் பிடிக்கும். நன்றாக அரைந்தவுடன் ஒரு நன்றாக கொட்டவும். பிறகு அதே கல்லில் அரிசியை போட்டு நன்றாக மை போல் அரைக்க வேண்டும். உளுந்து அரைக்க அரை மணிநேரம் எடுக்கும். அரிசி அரைபட முப்பதைந்து நிமிடம் ஆகும். இரண்டையும்உப்பு போட்டு ஒன்றாக கலந்து (கையால்கலக்கவேண்டும்) மூடி வைக்கவும.
    இந்த கலவையில் சிறிது நீர் விட்டு நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளலாம். இட்லி மாவை போல் இந்த மாவு நிறைய நேரம் ஊரவேண்டிய அவசியம் இல்லை. காலையில் அரைத்து விட்டு மாலையில் உபாயோக படுத்தலாம். தோசை கல்லில் ஒன்றரை கரண்டி மாவு விட்டு நன்றாக பரத்தவும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு அடுப்பை சின்னதாகி விடவும். தோசை நல்ல முறுவலுடன் வரும்.

Idly

மிகவும் அருமயான, சத்து மிகுந்த காலை உணவு. செய்வது மிகவும் சுலபம். தேவையான பொருட்கள் -

  • புழுங்கல் அரிசி - மூன்று கப்
  • முழு உளுத்தம் பருப்பு - ஒரு கப்
  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்.
  • உப்பு - ஒன்றேகால் டீஸ்பூன் (அல்லது தேவையான அளவு)

அரிசியை முதலில் ஆறு மணிநேரமாவது ஊறவைக்க வேண்டும். அதே போல் உளுத்தம்பருப்பையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஆறு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் க்ரிண்டேரில் உளுத்தம்பருப்பு வேந்திய கலவையை போட்டு அரைக்க விட வேண்டும். சிறிது சிறிதாக நீர் சேர்த்துக்கொள்ள வேண்தும். உளுத்தம்பருப்பு நிறைய நீர் பிடிக்கும். நன்றாக அறிந்தவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டவும். பிறகு அதே கல்லில் அரிசியை போட்டு நன்றாக மை போல் அரைக்க வேண்டும். உளுந்து அரைக்க அரை மணிநேரம் எடுக்கும். அரிசி அரைபட முப்பதைந்து நிமிடம் ஆகும். இரண்டையும்உப்பு போட்டு ஒன்றாக கலந்து (கையால் கலக்க வேண்டும்) மூடி வைக்கவும். இந்த மாவு ஊறுவதற்கு பதினெட்டிலிருந்து இருவது மணிநேரம் எடுக்கும். அடுத்த நாள் இட்லி வார்க்கும் பொழுது, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி, மாவை விட்டு அடுப்பில் வேக வைக்க வேண்டும். இந்த மாவு வேகுவதற்கு இருவது நிமிடம் பிடிக்கும்.

இட்லி வெந்ததாஎன்று அறிய ஒரு குச்சியோ அல்லது கத்தியின் முனயயோ இட்ல்யில் குத்தினால் மாவு ஈஷமல் வரும். இதுவே அடையாளம்.

Sunday, February 17, 2008

Idly - Sambar.

இந்த சாம்பார் நாம் தினமும் செய்யும் சாம்பார் மாதிரி அல்ல. இதற்கு தேவையான பொருட்கள் -

  1. பயத்தம்பருப்பு - கால் கப்.
  2. சின்ன வெங்காயம் - பத்துதோல் உரித்து வைக்கவும்
  3. முருங்கைக்காய் - ஐந்து
  4. காரட் - ஒன்று நறுக்கியது.
  5. ஒன்று - ஒன்று நறுக்கியது
  6. புளிவிழுது - ஒரு டேபிள் ஸ்பூன்.
  7. பெரிய என்னை - ஒன்று (ஒரு டேபிள்)
  8. ஸ்பூன் பொடி - ஒரு டீஸ்பூன்.
  9. மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்.
  10. உப்பு - தேவைகேற்ப

தாளிக்க:-

  1. eNNai - oru table spoon
  2. kadugu - 1/2 teaspoon
  3. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன
  4. பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
  5. சிவப்பு மிளகாய் - 1
முதலில் ஒரு பிரஷர் குக்கர் எடுத்து அதில் பயத்தம் பருப்பை இரண்டு நிமிடம் வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, மேல் கூறிய காய்கறிகள், மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு போட்டு தேவையான நீர் விட்டுவேக விடவும். இரண்டு முறை whistle வந்தால் போதுமாக இருக்கும். பிறகு குக்கர் திறந்து வேண்டும் என்றால் சிறிது நேரம் கொதிக்க விடவும். ஒரு சிறிய கடையில் எண்ணெய் விட்டு , சூடானவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன், தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு வறுக்கவும். சிவந்தவுடன் சம்பரில் கொட்டவும். இட்லி,தோசை பொங்கல் ஆகியவற்றிக்கு இந்த சம்பரை உபாயோகபடுதலாம்.

7 cups cake

இந்த கேக் செய்வதற்கு மிகவும் எளிது. இதற்கு தேவையான பொருட்கள்:-

  1. கடலை மாவு - 1 கப்.
  2. சக்கரை - 3 கப்
  3. நெய் - 1 கப்
  4. தேங்காய் துருவல் - 1கப்
  5. பால் - 1 cup.

அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் சூடாக்கவும்.பிறகு மேல் சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். கட்டி தட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கலவையில் கலந்த நெய் மிதந்து மேலே வரும் பொழுது கேக் சிறிது கெட்டியாகும் அப்போது அதை வேறு ஒரு நெய் தடவிய பாத்திரத்தில்கொட்டி வில்லைகள் போட வேண்டும். ஒரு அகலமான தட்டில் நெய்தடவி இதை கொட்டுவது நல்லது. வில்லைகள் போடுவதற்கு அது மிகவும் எளிதாக இருக்கும். கலவை சூடாக இருக்கும்பொழுதே நமக்கு அலங்கரிக்க வேண்டிய பொருட்களை கேக் மேல் அலங்கரித்து விட வேண்டும். பிறகு ஆறியவுடன் எடுத்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இந்த கேக் செய்வதற்கு இருவது நிமிடங்கள் பிடிக்கும்.

முந்திரி பருப்பு, திராட்சை பழம், பிஸ்தா பருப்பு ஆகியவை அலங்கரிக்க பயன் படுத்தலாம்.